தினம் ஒரு திருமுறை
மண்ணதனிற் பிறந்தெய்த்து
மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி
எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத்
தூய்நெறியே சேரும் வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி
எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத்
தூய்நெறியே சேரும் வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா
றார்பெறுவார் அச்சோவே.
-மாணிக்கவாசகர் (8-51-4)
பொருள்: மண்ணுலகில் பிறந்து விழகடவேனுக்கு அளவுபடாத அன்பை அருள் செய்து என்னை ஆண்டான். மேலும் எனக்குத் தன் திருவெண்ணீறு அணிவித்து, தூய்மையாகிய முத்தி நெறியை அடையும் வண்ணம் அருள்செய்தான். அவ்விறைவன் எனக்கு அருள் செய்த பேற்றைப் பெறவல்லவர் யாவர்?
No comments:
Post a Comment