தினம் ஒரு திருமுறை
தேடுவன் தேடுவன் செம்மலர்ப்
பாதங்கள் நாள்தொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு
மேலேயொர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை
பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்
தூர்எம் மடிகளே.
பாதங்கள் நாள்தொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு
மேலேயொர் நால்விரல்
மாடுவன் மாடுவன் வன்கை
பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்
தூர்எம் மடிகளே.
-சுந்தரர் (7-45-9)
பொருள்: நான் , திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம் தலைவனது திருவடிகளை நாள்தோறும் தேடுவேன் ; அவனை , உந்திக்குமேல் நால்விரல் அளவில் உள்ள இருதயத்தில் நினைப்பேன் ; வெளியில் சென்றால் வலிய கையால் பிடித்து மகிழ்ந்து உள்ளே சேர்ப்பேன் ; அவனுக்கு ஏற்புடையன ஆகும்படி கூத்துக்களை ஆடுவேன் .
No comments:
Post a Comment