தினம் ஒரு திருமுறை
வந்துற்றெழு மங்கல மாந்தர்கள்
தம்மை நோக்கிச்
சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு
மூர்த்தி யார்தாம்
முந்தைச்செய லாம்அமண் போய்முதற்
சைவ மோங்கில்
இந்தப்புவி தாங்கிஇவ் வின்னர
சாள்வ னென்றார்.
தம்மை நோக்கிச்
சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு
மூர்த்தி யார்தாம்
முந்தைச்செய லாம்அமண் போய்முதற்
சைவ மோங்கில்
இந்தப்புவி தாங்கிஇவ் வின்னர
சாள்வ னென்றார்.
- மூர்த்தி நாயனார் (39)
பொருள்: மங்கலச் செயல் புரியும் மாந்தர்களை , நோக்கி, சிந்தையில் சிவமே நிலவுகின்ற திருவுடைய அரசர் பெருமானாய மூர்த்தியார், `இதற்குமுன் இங்கு இருந்த சமணக் கொள்கை மறைந்து, எவற்றிற்கும் முதற் பொருளாய சிவபெருமானை அடைதற்குரிய சைவம் ஓங்குவதாயின், இவ்வுலகை ஏற்றுத் தாங்கி இவ்வினிய அரசினை ஆள்வேன்,` என்றார்.
No comments:
Post a Comment