தினம் ஒரு திருமுறை
நஞ்சி இடைஇன்று நாளையென் றும்மை நச்சுவார்
துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே.
துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே.
-சுந்தரர் (7-43-1)
பொருள்: நெஞ்சுருகி வணங்குகின்ற அடியவர், நீர் அருள் செய்யும் காலம் இன்று வாய்க்கும்; நாளை வாய்க்கும் என்று எண்ணிக் கொண்டேயிருந்து இறந்துவிட்டால், அதன்பின்பு நீர் அவர்களுக்குச் செய்வது என்ன இருக்கின்றது? பஞ்சியை அடைப்பதனால் குடுக்கை உடைந்து விடுமோ? புகழையுடைய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே விரைந்து அருள்புரியீர்.
No comments:
Post a Comment