தினம் ஒரு திருமுறை
மருவியகால் விசைத்தசையா
மரங்கள்மலர்ச் சினைசலியா
கருவரைவீழ் அருவிகளுங்
கான்யாறுங் கலித்தோடா
பெருமுகிலின் குலங்கள்புடை
பெயர்வொழியப் புனல்சோரா
இருவிசும்பி னிடைமுழங்கா
எழுகடலு மிடைதுளும்பா.
மரங்கள்மலர்ச் சினைசலியா
கருவரைவீழ் அருவிகளுங்
கான்யாறுங் கலித்தோடா
பெருமுகிலின் குலங்கள்புடை
பெயர்வொழியப் புனல்சோரா
இருவிசும்பி னிடைமுழங்கா
எழுகடலு மிடைதுளும்பா.
-ஆனாயநாயனார் (34)
பொருள்: காற்று விரைவாக வீசாமலும் . மரங்களில் உள்ள கிளைகளும் அசையமலும், கருமலையில் நின்றும் வீழ்கின்ற அருவி யாறுகளும், காட்டாறுகளும், ஒலித்து ஓடாவாயின. பெருமுகிலின் குலங் கள் யாவும் பெயர்ந்து எழுகின்ற தமது செயல் ஒழிய, மழை பொழியா வாயின. பெருவானத்திடையே இடி முதலிய முழக்கங்கள் எழாவாயின. எழுகடலின் இடையாக யாதோர் அலையும் தோன்றாது அசைவற்று நின்றன.
No comments:
Post a Comment