தினம் ஒரு திருமுறை
நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடைமேன் மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரணமென் னைகொலாம்
ஊற்றமிக்க காலன் றன்னை யொல்கவுதைத் தருளி
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுரமே யவனே.
ஏற்றமாக வைத்துகந்த காரணமென் னைகொலாம்
ஊற்றமிக்க காலன் றன்னை யொல்கவுதைத் தருளி
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுரமே யவனே.
-திருஞானசம்பந்தர் (1-51-5)
பொருள்: காலனை அழியுமாறு உதைத் தருளி, எல்லாப் பொருள்கட்கும் தோற்றமும் ஈறுமாகி நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மணம் மிக்க கொன்றை மலர்கள் நிறைந்த செஞ்சடையின்மேல் பிறைமதியை அழகு பெறவைத்து மகிழ்தற்குக் காரணம் என்?
No comments:
Post a Comment