தினம் ஒரு திருமுறை
நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும்
அத்தன்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைச்
சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப்
பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே.
அத்தன்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைச்
சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப்
பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே.
- சுந்தரர் (7-37-11)
பொருள்: உள்ளத்தால் நிலையாக நினைந்து , வாயால் துதித்து , கையால் தொழுகின்ற தந்தையாரும் , அழகிய பொன்போலும் திருவடிகளை யுடைய தலைவரும் ஆகிய திருவாரூர் இறைவரை , அவரையே எப்பொழுதும் சித்தத்தில் வைத்ததனால் வந்த புகழையுடையவனும் , சிங்கடிக்குத் தந்தையும் , உண்மையான திருத்தொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாடுங்கள் .
No comments:
Post a Comment