தினம் ஒரு திருமுறை
நீறு நுந்திரு மேனி நித்திலம்
நீல்நெ டுங்கண்ணி னாளொடும்
கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந்
திடகி லோம்பலி நடமினோ
பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஆறு தாங்கிய சடைய ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.
நீல்நெ டுங்கண்ணி னாளொடும்
கூற ராய்வந்து நிற்றி ராற்கொணர்ந்
திடகி லோம்பலி நடமினோ
பாறு வெண்டலை கையி லேந்திப்பைஞ்
ஞீலி யேனென்றீ ரடிகள்நீர்
ஆறு தாங்கிய சடைய ரோசொலும்
ஆர ணீய விடங்கரே.
- சுந்தரர் (7-36-5)
பொருள்: நீறு அழிந்த வெண்மையான தலையோட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு , ` யான் இத் திருப்பைஞ்ஞீலியில் உள்ளேன் ; சிறிது பிச்சை இடுமின் ` என்றீர் ; உமது திருமேனியில் உள்ள நீறு முத்துப்போல வெள்ளொளியை வீசுகின்றது . ஆயினும் , கரிய நீண்ட கண்களையுடைய பெண் ஒருத்தி யோடும் கூடிய பாதி உருவத்தை யுடையிராய் வந்து நிற்கின்றீர் ; அதன் மேலும் நீர் , கங்கையைச் சுமந்த சடையை உடையவரோ ? சொல்லீர் ; இதனால் , உமக்கு நாங்கள் பிச்சையைக் கொணர்ந்தும் இடேமாயினேம் ; நடவீர் .
No comments:
Post a Comment