தினம் ஒரு திருமுறை
பொன்தரத் தாரு மென்று
புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத்
தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி
அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்
நிறைந்தெழு களிப்பி னோடும்.
புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத்
தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி
அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்
நிறைந்தெழு களிப்பி னோடும்.
-குங்குலி கலயநாயனார் (12)
பொருள்: நான் பொன் தர நீர் இக்குங்குலியத்தைத் தாரும் என்றதும் வணிகனும் அவரை நோக்கி, `எவ்வளவு பொன் இதற்குக் கொடுப்பீர்` என்ன, கலயனாரும் தம் மனைவியாரின் தாலியைக் கொடுத்தலும், அவ்வணிகன், அதனை வாங்கிக் கொண்டு அப்பொதியினைக் கொடுப்பக் கொண்டு, அங்கு நில்லாது தம் மனத்தில் நிறைந்து எழும் மகிழ்ச்சியோடு விரைந்து சென்றார்.
No comments:
Post a Comment