தினம் ஒரு திருமுறை
நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூச லாடாமோ.
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூச லாடாமோ.
-மாணிக்கவாசகர் (8-16-4)
பொருள்: நஞ்சுடைய கண்டத்தை யுடையவனும், தேவலோகத்தவர்க்குத் தலைவனும், மேகங்கள் படிகின்ற மேல் மாடங்களையுடைய அழகிய திருவுத்தர கோச மங்கை யில் இனிய மொழியையுடைய உமாதேவியோடு கூடியவனும் அடி யாரது மனத்துள்ளே நிலைத்து நின்று அமுதம் சுரப்பவனும் இறப்புப் பிறப்புகளைத் தவிர்ப்பவனுமாகிய தூய்மையானவனின் புகழினைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.
No comments:
Post a Comment