தினம் ஒரு திருமுறை
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென்
- காரைகாலம்மையார் (11-4-81)
பொருள்: செஞ்சடையுடைய சிவபெருமான் சேவடிக்கு ஆளாய் திருமறை, சாத்திரங்கள் ஓதினோம் . இனி வேறு உரைகள் பற்றியாம் உணர்வது யாதுமில்லை. அதனால், இம்மைக்கும், அம்மைக்கும் ஆவன யாவற்றாலும் அமைந்தோம்; இஃது அறியாது, புறச் சமயத்தீர் எம்மைப் புறங்கூறுதல் ஏன்.
No comments:
Post a Comment