தினம் ஒரு திருமுறை
குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து
நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை
யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின்
மனங்கனிவித்
தெதிர்வதெப் போது பயில்விக் கயிலைப்
பரம்பரனே.
நின்குறிப்பில்
விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை
யார்ந்தினிய
மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின்
மனங்கனிவித்
தெதிர்வதெப் போது பயில்விக் கயிலைப்
பரம்பரனே.
- மாணிக்கவாசகர் (8-6-34)
பொருள்: நிறைய மலர்களையுடைய கயிலையில் வாழ் கின்ற பரம்பரனே ! உன் திருவுளக் கருத்திற்கு நடப்பதில் மகிழ்ச்சியின்றி நின்று என் குறிப்பின்படி செய்து, உன் குறிப்பினை அறிவதில் விரைகின்ற என்னை விட்டு விடுவாயோ? வாழைப் பழத்தைப் போல என்னை மனம் குழையச் செய்து, மணம் நிறைந்து இனிதாய் இருக்கின்ற ஓர் இனிமையில் மற்றோர் இனிமை கலந்தது போன்று நீ எதிர்ப்படுவது எக்காலம்?
No comments:
Post a Comment