தினம் ஒரு திருமுறை
நாளும் நன்னிலந் தென்பனை
யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக்
காவு நெடுங்களம்
காள கண்டன் உறையுங்
கடைமுடி கண்டியூர்
வேளா நாட்டுவே ளூர்விளத்
தூர்நாட்டு விளத்தூரே.
யூர்வட கஞ்சனூர்
நீள நீள்சடை யான்நெல்லிக்
காவு நெடுங்களம்
காள கண்டன் உறையுங்
கடைமுடி கண்டியூர்
வேளா நாட்டுவே ளூர்விளத்
தூர்நாட்டு விளத்தூரே.
- சுந்தரர் (7-12-8)
பொருள்: நன்னிலம் , பனையூர் , கஞ்சனூர் , நீண்ட சடையையுடைன் நெல்லிக்காவில் , நெடுங்களம் , மிக , நஞ்சணிந்த கண்டத்துடன் கடைமுடி என்ற ஊரிலும் , கண்டியூர் , வேளா நாட்டில் உள்ள வேளூர் , விளத்தூர் நாட்டிலுள்ள விளத்தூர் என்ற ஊரிலும் , இறைவன் எந்நாளும் எழுந்தருளியிருப்பன் .