தினம் ஒரு திருமுறை
சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக்
குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
வோவின்று சூழ்கின்றதே.
குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
வோவின்று சூழ்கின்றதே.
-திருக்கோவையார் (8-21,2)
பொருள்: பூவிற்றேனை யுடைய நெருங்கிய சுருண்ட குழலையுடையாய்; சிறிய கண்ணினையும்; பெரிய கையினையும்; திண்ணியகோட்டினையும்; குழைந்த செவியினையும்; சிவந்த முகத்தினையு முடைய யானையினது வருத்தும் வளைப்புக்கெடக் குரவராற் பாதுகாக்கப்படு முற்காலத்து நம்மை யுய்வித்தவர்; கருப்பு வில்லையுடையவனைச் சென்றுற்ற கண்ணிற்றீயை யுடையவனுறையும் அம்பலத்தை யுன்னாதாரைப் போல; இன்று சூழ்கின்றது இதுவோ கண்ணோட்ட மின்றித் தம்மல்ல தில்லாத இக்காலத்து நினைக்கின்றதிதுவோ! இது தகுமோ!